சென்னை அபார்ட்மெண்டில் பெண் கொலை-நகைகள் கொள்ளை
சென்னை:சென்னை மடிப்பாக்கம் பகுதியில் அடுக்கு மாடிக் குடியிருப்பில், தனியாக இருந்த பெண்மணியைக் கொலை செய்து விட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் புறநகர்ப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் 2வது தெருவில் வசிப்பவர் ஜெகதீஸ்வரி. இவர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவைப்பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது தாயார் பத்மினி (51), சகோதரர் லோகேஷ் ஆகியோருடன் வசித்து வந்தார்.
லோகேஷ் பெங்களூரில் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வேலைக்குப் போய் விட்டார் ஜெகதீஸ்வரி. வீட்டில் பத்மினி மட்டும் இருந்தார். மதியம் வீடு திரும்பிய ஜெகதீஸ்வரி, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு தட்டினார். ஆனால் திறக்கப்படவில்லை.
பின்புறம் போய் பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்ற அவர் அங்கு தாயார் பத்மினி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தார்.
வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 25 பவுன் நகைகளும் திருடப்பட்டிருந்தன. பணமும் திருட்டுப் போயிருந்தது.
பத்மினி தனியாக இருப்பதை அறிந்து கொண்ட திருடர்கள் அவரை அடித்துக் கொலை செய்து நகை, பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த படுகொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications