அதிமுகவில் இணைந்தார் மாஜி தேர்தல் ஆணையர் பழனிச்சாமி
சென்னை:முன்னாள் தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அதிமுகவில் இணைந்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது தேர்தல் ஆணையராக இருந்தவர் பழனிச்சாமி. தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதையும் மறந்து அதிமுககாரர் போலவே நடந்து கொண்டார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது பெருமளவு முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டின, அரசுக்கு ஆதரவாக பழனிச்சாமி நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டின.
இந்த நிலையில், பழனிச்சாமிக்கு அடுத்தடுத்து பதவி நீட்டிப்பு கொடுத்தார் ஜெயலலிதா. ஒரு கட்டத்தில் அவ்வப்போது பதவி நீட்டிப்பு தருவதை நிறுத்திவிட்டு ஒரேயடியாக வயது வரம்பே இல்லாமல் பதவி நீட்டிப்பு தந்து புரட்சி செய்தார் ஜெயலலிதா.
இதற்காக தேர்தல் ஆணையர் ஓய்வு பெற வயது வரம்பே கிடையாது என்று புதிய சட்ட திருத்தத்தையும் கொண்டு வந்தார் புரட்சித் தலைவி.
இதை எதிர்த்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம் சட்ட திருத்தம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து பழனிச்சாமி ஒரு வழியாகப் பதவி விலகினார்.
இந் நிலையில், பழனிச்சாமி தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். நேற்று ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிய அவர், அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா வழங்கினார்.
இவரையும் சேர்த்து அதிமுகவில் தற்போது இரண்டு முன்னாள் தேர்தல் ஆணையர்கள் உள்ளனர். ஏற்கனவே அதிமுகவில் சேர்ந்து விட்ட மலைச்சாமி ராஜ்யசபா எம்.பியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications