மன்மோகன் போட்டியின்றி ராஜ்யசபாவுக்குத் தேர்வு
குவஹாத்தி:அஸ்ஸாமிலிருந்து ராஜ்யசபாவுக்குப் போட்டியிட்ட பிரதமர் மன்மோகன் சிங் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் ஜூன் 14ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து மன்மோகன் சிங்கால் ஏற்படும் காலியிடம் உள்ளிட்ட இரு ராஜ்யசபா இடங்களுக்கு அஸ்ஸாமில் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் மன்மோகன் சிங்கும், அஸ்ஸாம் கன பரிஷத் சார்பில் குமார் தீபக் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடைசி நேரத்தில், மதாங் சிங் என்பவரும் மனு தாக்கல் செய்ததால் போட்டி ஏற்படும் சூழல் நிலவியது.
இந்த நிலையில் மதாங் சிங் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து மன்மோகன் சிங் மற்றும் குமார் தீபக் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தாஸ் அறிவித்தார்.
அஸ்ஸாமிலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்படுவது இது 4வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
1991ம் ஆண்டு முதல் முறையாக ராஜ்யசபா எம்.பியான மன்மோகன் சிங், அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில், நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1995லும், 2001லும் அஸ்ஸாமிலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வானார் மன்மோகன் சிங்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications