ராஜ்யசபா தேர்தல்: செல்வராஜை நியமிக்க வைகோவும் எதிர்ப்பு
சென்னைதமிழகத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் தமிழக சட்டசபை செயலாளர் செல்வராஜை தேர்தல் அதிகாரியாக நியமிக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கு செல்வராஜை தேர்தல் அதிகாரியாக நியமிக்க கூடாது என வற்புறுத்தி கடிதம் எழுதியிருந்தார்.
அதே போல மதிமுக பொது செயலாளர் வைகோவும் செல்வராஜை தேர்தல் அதிகாரி நியமிக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழகத்தில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தல் சுகந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டி மதிமுக சார்பாக இந்த வேண்டுகோளை முன் வைக்கிறேன்.
இப்போது தமிழ்நாடு சட்டமன்ற செயலாளராக உள்ள செல்வராஜை தேர்தல் அதிகாரியாக நியமிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. செல்வராஜ் இன்னும் சில மாதங்களில் ஓய்வுப் பெறப் போவதால் அவர் பணி நீட்டிப்புக்கு முயற்சி செய்வதாகவும் தெரிகிறது.
எனவே நடைபெறவுள்ள தேர்தலில் திமுக கட்சியினருக்கு சாதகமாக செயல்பட்டால் பதவி நீட்டிப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டு அரசுக்கும் அந்த அதிகாரிக்கும் ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசியல் கட்சியின் எண்ணிக்கை பலம் பரவலாக இருப்பதால் ஒரு வாக்கின் சிறு மாற்றம் கூட எதிர் அணி வேட்பாளரின் வெற்றிக்குச் சாதகமாக அமையக்கூடும் என்பது எங்கள் கருத்து.
தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ளும்போதோ அல்லது தள்ளுபடி செய்யும் போதோ ஒரு தவறான முடிவை எடுத்தால், பாதிக்கப்பட்ட நபர் தனக்கு இழைக்கப்பட்ட தீங்குக்குத் தீர்வு காண நீதிமன்றத்தைத் தான் அணுக முடியும். ஆனால் அந்தத் தீர்வு கிடைக்க பல வருடங்கள் ஆகும்.
ஆகவே செல்வராஜை போன்ற ஒருவர் திமுக ஏற்பாட்டினால் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டால் தேர்தல் முடிவுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நடக்க இருக்கின்ற ராஜ்யசபா தேர்தலில் நேர்மையான ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதற்கு முன் தமிழகத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் தமிழக சட்டமன்ற செயலாளர் தேர்தல் ஆணையாராக நியமிக்கப்பட்டது தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்ற முன் உதாரணம் உள்ளது என்பதையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.
மேலும் தேர்தல் விதிகளின்படி தேர்தல் அதிகாரியை நியமிக்க தேர்தல் ஆணையத்துக்கு வானாலாவிய அதிகாரம் உண்டு என்று இந்திய உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம்












Click it and Unblock the Notifications