சென்னை டூ திருச்சிக்கு புது விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையிலிருந்து திருச்சிக்கு வருகிற 25ம் தேதி முதல் இந்தியன் (முன்னாள் இந்தியன் ஏர்லைன்ஸ்) நிறுவனம் புதிய விமான சேவையை தொடங்குகிறது.
sஇதுகுறித்து இந்தியன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை-திருச்சி இடையிலான புதிய விமான சேவை திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும்.
ஐசி 521 என்ற ஏ 320 ரக விமானம் சென்னையில் காலையில் 9.25 மணிக்கு புறப்பட்டு 10.15 மணியளவில் திருச்சியை சென்றடையும்.
அங்கிருந்து பகல் 11 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்னை வந்தடையும்.
இந்த விமான சேவையை பிரபலப்படுத்துவதற்காக வரிகள் உள்பட ரூ. 1,625 என்ற சலுகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications