28ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: பத்தாவது வகுப்பு தேர்வு முடிவுகள் வருகிற 28ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் நடந்த பத்தாவது வகுப்பு தேர்வுகளை 7 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன் தேர்வை சுமார் ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பத்தாவது வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 5ம் தேதி வெளியானது. இந்த ஆண்டு அதற்கு முன்பே வெளியிட தேர்வுகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.
இம்மாதம் 28ம் தேதி பத்தாவது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications