இசையமைப்பாளர் எல்.வைத்யநாதன் மரணம்
சென்னை:பிரபல வயலின் கலைஞரும், இசையமைப்பாளருமான எல்.வைத்தியநாதன் மரணமடைந்தார். அவருக்கு வயது 65.
![]() |
வயலின் இசை மேதையான லட்சுமிநாராயணாவின் மூத்த புதல்வர்தான் வைத்தியநாதன். இவரது சகோதரர்கள் எல்.சுப்ரமணியம், எல்.சங்கர் ஆகியோரும் வயலின் கலைஞர்கள்தான்.
தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 160க்கும் மேற்பட்ட படங்களுக்கு வைத்தியநாதன் இசையமைத்துள்ளார்.
தமிழில் இவர் இசையமைத்த ஏழாவது மனிதன் படத்துக்காக பல விருதுகளை பெற்றார். இப்படத்தில் முழுக்க முழுக்க பாரதியாரின் பாடல்கள் மட்டுமே இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல கமல்ஹாசன் நடித்த பேசும் படம் படத்திற்கும் வைத்தியநாதன்தான் இசையமைத்திருந்தார். இதேபோல மால்குடி டேஸ் டிவி தொடருக்கும் வைத்தியநாதன் இசையமைத்திருந்தார்.
தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார் வைத்தியநாதன். 65 வயதாகும் வைத்தியநாதனுக்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
வைத்தியநாதனுக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications