மத்திய அமைச்சர் குடும்பத்தால் தீட்டு:குருவாயூர் கோவிலில் தண்ணீர் தெளித்து பூஜை!
சென்னை:மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் மற்றும் அவரது கிறிஸ்தவ மனைவி வந்து சென்றதால் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பரிகாரப் பூஜை நடத்தப்பட்டது. இது கேரளாவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சராக இருப்பவர் வயலார் ரவி. இவரது மருமகள் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
ரவி, அவரது மகன் ரவிகிருஷ்ணா, மனைவி மற்றும் அவரது பேரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்றனர். அங்கு ரவியின் பேரனுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ரவியின் மருமகள் இந்து சமயத்தவர் அல்லாத காரணத்தால், அவர்கள் சென்ற பின்னர் கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டு, கோவில் சுத்தப்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.
தூய்மைப்படுத்தும் பூஜை நடந்ததை கோவில் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து வயலார் ரவி பெரும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இது தேவையில்லாத ஒன்று. பக்தர்கள் கோவிலுக்கு வரக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இது எனக்கு மிகவும் வேதனையைக் கொடுத்துள்ளது. என்னையும், எனது குடும்பத்தையும், எனது பரம்பரையையும் கோவில் நிர்வாகம் அவமானப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் எனது ஒட்டுமொத்த பரம்பரையே கோவிலுக்கு வரக் கூடாது என்று கூறுவது போல உள்ளது என்றார்.
ரவிகிருஷ்ணா இதுகுறித்துக் கூறுகையில், இந்த சம்பவம் அவசியமற்றது. இதுகுறித்து பொது விவாதம் நடத்தப்பட வேண்டும். அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து யோசித்து வருகிறேன் என்றார்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா












Click it and Unblock the Notifications