இந்தோனேஷியா, தாய்லாந்தில் கடல் கொந்தளிப்பு:ஒருவர் பலி- சுனாமி பீதியில் மக்கள்
பாங்காக்:இந்தோனேஷியா, தாய்லாந்து கடலில் ராட்சத அலைகள் ஏற்பட்டன. இந்த அலையில் சிக்கி ஒருவர் பலியானர். இதனால் மக்கள் சுனாமி பீதியில் உள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடு இந்தோனேஷியா. இந்த சுனாமியில் அங்கு ஏராளமானேர் உயிரிழந்தனர்.
இந் நிலையில் இந்தோனேஷியா கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக ராட்சத அலைகள் எழுந்து வருகின்றன. பாலி தீவில் உள்ள குடா கடற்கரை, ஜாவா தீவு ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் 20 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஏற்பட்டன.
ராட்சத அலையால் கடலோரத்தில் உள்ள ஏராளமான கடைகள், ஹோட்டல்கள், கட்டிடங்கள் சேதமடைந்தன. ராட்சத அலையில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். நேற்று சுமத்ரா தீவு உள்ளிட்ட இடங்களில் ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. இதனால் பொது மக்கள் சுனாமி பீதியில் ஆழ்ந்தனர்.
கடலில் ஆக்ரோஷத்தை தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்தோனேஷிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல தாய்லாந்து நாட்டிலில் உள்ள புக்கட் தீவில் 3 முதல் 4 மீட்டர் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தது.
இதனால் கடலோரத்தில் இருந்த ஹோட்டல்கள், கடைகள், வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மேலும் பொதுமக்கள் சுனாமி பீதி அடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.
ராட்சத அலைகள் காரணமாக இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் சுனாமி பீதி உருவாகியுள்ளது. இருப்பினும் இந்த நாடுகளில் நில நடுக்கம் ஏதும் ஏற்படவில்லை, சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுவிக்கப்படவில்லை.
தமிழக கடலோரப் பகுதிகளிலும் ராட்சத அலைகள் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications