தமிழகம் முழுவதும் இடியுடன் மழை:மின்னல் தாக்கி 5 பேர் பலி
கடலூர்தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று சூறாவளி, இடியுடன் கூடிய கன மழை பெய்தது. மின்னல் தாக்கி 5 பேர் பலியானார்கள்.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே சூறாவளிக் காற்றும், கன மழையும் பெய்து வருகின்றன. இடியும், மின்னலும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
நேற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. பல பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றும் வீசியது. இதில் பல தோட்டங்கள் சிக்கி சேதமடைந்தன.
சென்னை நகரிலும் நேற்று மாலையில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. நகரின் உட் பகுதியில் நல்ல மழை பெய்தது. ஆனால் புறநகர்ப் பகுதியில் வெறும் காற்று மட்டுமே வீசி ஓய்ந்தது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே பத்திரக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த கனகராணி (40), அவரது மகள் சாமுண்டீஸ்வரி (14), மகன்கள் விஜயன் (11), சூர்யா (10), ரத்தினசாமி என்பவரின் மனைவி பச்சையம்மாள் உள்ளிட்டோர் புலியூர் பகுதியில் முந்திரி பொறுக்கச் சென்றனர்.
அப்போது பலத்த காற்றுடன் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. காட்டுக்குள் ஒதுங்க இடம் இல்லாததால் அனைவரும் நனைந்தபடியே முந்திரி பொறுக்கினர். அப்போது மின்னல் தாக்கியது.
இதில் கனகராணி, விஜயன், சாமுண்டீஸ்வரி ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதேபோல பண்ருட்டி அருகே காடம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசி என்பவரும் முந்திரி பொறுக்கிக் கொண்டிருந்தபோது இடி தாக்கி இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள அழிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி நீலமேகம் என்பவர் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது இடி தாக்கி பரிதாபமாக இறந்தார்.
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications