எம்.ஆர்.ராதா நூற்றாண்டு விழா:கருணாநிதிக்கு ராதிகா அழைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு முதல்வர் கருணாநிதிக்கு நடிகையும், ராதாவின் மகளுமான ராதிகா நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
![]() |
எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட ராதிகா ஏற்பாடு செய்து வருகிறார். விழா குறித்து முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது, விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், எம்ஆர் ராதா மறக்க முடியாதவர். அவரது நூற்றாண்டு விழாவிற்கு ஒத்துழைப்பு தருவேன். இந்த விழா எப்போது நடக்கிறதென்று கூறினால் நான் நிச்சயமாக கலந்து கொள்கிறேன் என்றாராம்.













Click it and Unblock the Notifications