பி.இ. கவுன்சிலிங் கட்டணம் ரத்து: பொன்முடி
சென்னை பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்கில் (கலந்தாய்வு) கலந்து கொள்பவர்களுக்கு அதற்கான கட்டணம் ரத்து செய்யப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு கட்டணம் ரூ.300 ஆக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ரூ.200 ஆக குறைக்கப்பட்டது. தற்போது இந்தக் கட்டணமும் ரத்து செய்யப்படுகிறது.
தொலைதூரத்திலிருந்து கலந்தாய்வுக்காக வரும் மாணவ, மாணவியரின் நலன் கருதி கலந்தாய்வுக் கட்டணத்தை ரத்து செய்யலாம் என முதல்வர் யோசனை கூறியதன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்விற்கு வரும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பேருந்து கட்டணத்தில் சலுகையளிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். கலந்தாய்வு அழைப்பிதழை காட்டி இந்த பயண கட்டண சலுகையை பெறலாம்.
கலந்தாய்வுக்காக சென்னைக்கு வருவோரின் வசதிக்காக, கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய இடங்களிலிருந்து அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார் பொன்முடி.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications