மக்களுக்காக நிலம் தராத விஜயகாந்த்: கருணாநிதி
சென்னை:சொத்துக்களைக் குவித்தும், மாட மாளிகைகளைக் கட்டியும் வைத்துள்ள சில மனிதர்களுக்கு மக்களுக்காக நிலம் கொடுக்க மனம் வரவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மறைமுகமாக சாடியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை,
சொத்துக்களைக் குவித்துக் கொண்டு, மாட மாளிகைகளைக் கட்டிக் கொண்டு இருக்கும் சிலருக்குத்தான் மக்களுக்காக கணிசமான நிலத்தைத் தர மனம் வரவில்லை.
சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக எடுக்கப்படும் நிலங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும். பெரிய பணக்காரர்களை விட ஏழை மக்களுக்கு எப்போதுமே பெரிய மனசு உண்டு.
சிலரைப் போல, சொத்து போகிறதே என்று கூப்பாடு போடுவதில்லை, மக்கள் நலனுக்காக தங்களது நிலத்தை இழக்க எப்போதுமே அவர்கள் தயங்கியதில்லை. அரசியல் உள்நோக்கம் என்று வம்பாக குற்றம் சாட்டுவதும் இல்லை.
கலைஞர் டிவி குறித்து ஒரு வாரப்பத்திரிக்கை மிக மோசமாக விமர்சித்திருக்கிறது. திருப்பித் தாக்கும்போது அதைத் தாங்கும் தைரியத்துடன் அந்தப் பத்திரிக்கை இருக்கட்டும்.
எனது வாழ்க்கையில் விமர்சனங்களை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டுள்ளேன். அவமானமாக ஒருபோதும் நான் கருதியதில்லை.
பொறியியல் கவுன்சிலிங்கை ஒரே இடத்தில் நடத்தினால் அது வேகமாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் என்பதால்தான் சென்னையில் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
வெளியூர்களிலிருந்து சென்னைக்கு கவுன்சிலிங்குக்காக வரும் மாணவர்களின் நலனுக்காக கவுன்சிலிங்குக்கான கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல பேருந்துக் கட்டணத்திலும் பாதி அளவுக்கு சலுகை தரப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்குள் அரசியல் மாற்றம் ஏற்படும் என வைகோ கூறி வருவது வியப்பாக உள்ளது. ஒரு வேளை அவரது கட்சியுடனான தொடர்பை அம்மா இந்த ஆண்டு இறுதிக்குள் துண்டித்துக் கொள்ளப் போகிறாரோ என்னவோ.
திருப்பூர் டாஸ்மாக் மதுக் கடை பாரில் ஏற்பட்ட விபத்தில் 29 பேர் இறந்துள்ளனர். இந்த பாரை திமுகவைச் சேர்ந்தவர் நடத்தியதாக கூறுவது தவறு. உண்மையில் அந்த பாரை நடத்தி வந்தவர் மதிமுகவைச் சேர்ந்தவர் என்று பத்திரிக்கைகள் அனைத்திலும் செய்தி வந்துள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications