சிங்கப்பூரில் கொலை முயற்சி வழக்கில்சிக்கிய மும்பை மாணவர்
சிங்கப்பூர்:சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரையும், அவரது வேலைக்காரர்களையும் கொலை செய்ய முயற்சித்ததாக மும்பையைச் சேர்ந்த மாணவரை சிங்கப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்தவர் பட்லா ஜதீன் நவீன். 21 வயதாகும் இவர் சிங்கப்பூரில் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி 72 வயது தொழிலதிபர் மாணிக் சஹானியைக் கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்டார் நவீன்.
மேலும், சஹானியின் இரு வேலைக்காரர்களை சரமாரியாக அடித்ததாகவும், சஹானியின் 37 வயது மகள் மம்தா மாணிக்கை தவறான நோக்கத்துடன் அடைத்து வைத்ததாகவும் பட்லா மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இவர் மீதான வழக்கு ஜூலை 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 13ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
பட்லா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பட்லாவுக்கு எதிராக 53 சாட்சியங்களை அரசுத் தரப்பு சமர்ப்பித்துள்ளது.
நேற்று பட்லா மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவரது தாயார் மும்பையிலிருந்து வந்திருந்தார். விசாரணை நடந்தபோது அவர் கோர்ட் வளாகத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications