சன் டிவி அதிகாரிக்கு கொலை மிரட்டல்
சென்னை:சன் டிவியின் துணைத் தலைவரும், தலைமை நிகழ்ச்சி அதிகாரியுமான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
நேற்று காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ஹன்ஸ் ராஜ் சக்ஸேனா, ஆணையர் லத்திகா சரணைச் சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.
அதில், தனது செல்போனைத் தொடர்பு கொண்ட ஒருவர், உடனடியாக சன் டிவியிலிருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை, கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று மிரட்டியதாக தனது புகாரில் கூறியுள்ளார் சக்ஸேனா.
இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். அதில், பி.சி.ஓ.விலிருந்து அந்த தொலைபேசி அழைப்பு வந்தது தெரிய வந்தது. விரைவில் கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது கண்டுபிடிக்கப்படும் என லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
புதிதாக தொடங்கப்படவுள்ள கலைஞர் டிவிக்கு சன் டிவியிலிருந்தே ஆட்களை இழுக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் சன் டிவியின் துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications