அறிவாலயத்தில் கலைஞர் டிவி அலுவலகம் திறப்பு
சென்னை:திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் டிவியின் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
சன் டிவியுடனான உறவை திமுக முறித்துக் கொண்டு விட்ட நிலையில், புதிதாக கலைஞர் டிவியைத் தொடங்குகிறது திமுக. ராஜ் டிவியின் உதவியுடன் தொடங்கப்படும் கலைஞர் டிவி குறித்த முழுமையான, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது.
![]() |
இந்த நிலையில், கலைஞர் டிவிக்கான அலுவலகம் அண்ணா அறிவாலய வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்திற்கு அருகே உள்ள அறையில் டிவிக்கான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்கு கலைஞர் தொலைக்காட்சி அலுவலகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே சன் டிவியை அறிவாலய வளாகத்திலிருந்து காலி செய்யுமாறு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது போதிய இட வசதி இல்லாததால், சன் டிவியால் அறிவாலயத்திலிருந்து இடம் மாற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் சொந்த கட்டடடத்திற்கு அவர்கள் இடம் மாறிச் செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சன் டிவி இடத்தைக் காலி செய்ததும் அங்கு கலைஞர் தொலைக்காட்சி குடிபுகும் எனத் தெரிகிறது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா













Click it and Unblock the Notifications