மதுரை இடைத் தேர்தல்-அதிமுக சார்பில்காளிமுத்து மகன் அண்ணாத்துரை போட்டி?
மதுரை:மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாத்துரையை நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ எஸ்வி சண்முகம் கடந்த பிப்ரவரி மாதம் மரணமடைந்தார். இதையடுத்து இத் தொகுதியில் வரும் ஜூன் 26ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மேற்குதொகுதியில் கடந்த முறை திமுக கூட்டணியான காங்கிரஸ் போட்டியிட்டது. எனவே இந்த முறையும் காங்கிரசுக்கே இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வேட்பாளர் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதேபோல தேமுதிக, பாஜக கட்சிகளும் யாரை வேட்பாளராக நிறுத்துவது என தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
அதிமுகவை பொறுத்த வரை முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாத்துரை, முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ, எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எம்எஸ் பாண்டியன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.
இதில் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாத்துரைக்கு சசிகலாவின் ஆதரவும் உள்ளதால் அவரே நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த தொகுதியில் முக்குலத்தோர் சமூக வாக்காளர்கள் சுமார் 75,000 பேர் உள்ளனர். டேவிட் அண்ணாத்துரையும் முக்குலத்தோர் என்பதால் அவரையே வேட்பாளராக நிறுத்த அதிக வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications