ஜூன் 1ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூன் முதல் தேதி வெளியிடப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு நடந்தது. இதை மொத்தம் 7.76 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தனித் தேர்வர்களாக மட்டும் 93,400 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
அதே போல மெட்ரிகுலேஷன் தேர்வை 1 லட்சத்து 1,500 பேர் எழுதியுள்ளனர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4,600 பேரும் மற்றும் ஓரியன்டல் தேர்வை 1,369 பேரும் எழுதியுள்ளனர்.
இந்த தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியும் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியும் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து வரும் ஜூன் 1ம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளன.
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை அன்றைய தினம் உடனுக்குடன் தட்ஸ்தமிழ்.காமில் காணலாம்












Click it and Unblock the Notifications