ராஜ்யசபா: அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்
சென்னை:ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று அதிமுக வேட்பாளர்கள் இருவரும் மனுத் தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 15ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
முதல் நாளான இன்று அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் டாக்டர் மைத்ரேயன், ஆ. இளவரசன் ஆகிய இருவரும் மனு தாக்கல் செய்தனர். தேர்தல் அதிகாரியான நரேஷ்குப்தாவிடம் இருவரும் தங்களது வேட்பு மனுக்களை வழங்கினர்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஜூன் 5ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். 6ம் தேதி மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 8ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். போட்டி இருந்தால் ஜூன் 15ம் தேதி காலை வாக்குப்பதிவு நடந்து மாலையில் முடிவு அறிவிக்கப்படும்.
இத்தேர்தலில் திமுக சார்பில் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசிய செயலாளர் டி.ராஜா போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது இதுவரை தெரியவில்லை.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications