ஆப்ரோ-ஆசிய கோப்பை-சச்சின் விலகல்:கங்குலி, ஜாகீர் கான் அணியில் சேர்ப்பு
கோலாலம்பூர்ஆப்பிரிக்க லெவன் அணிக்கும் ஆசிய லெவன் அணிக்கும் இடையிலான ஆப்ரோ-ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து சச்சின் டெண்டுல்கர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆசிய லெவன் அணியில் கங்குலியும், ஜாகீர் கானும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க லெவன் அணிகளுக்கும், ஆசிய லெவன் அணிக்கும் இடையிலான ஆப்ரோ-ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 6ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையே 3 ஒரு நாள் போட்டிகள், ஒரு 20-20 போட்டி நடைபெறவுள்ளது.
முதல் போட்டி ஜூன் 6ம் தேதி பெங்களூரில் நடக்கிறது. 2வது போட்டி 9ம் தேதியும், 3வது போட்டி 10ம் தேதியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகள் அனைத்தும் பகல் இரவு ஆட்டமாக நடைபெறும்.
இந்த போட்டியில் ஆப்பிரிக்க லெவன் அணிக்கு கேப்டனாக தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்பிரிக்க லெவன் அணியில் தென் ஆப்பிரிக்கா, கென்யா, ஜிம்பாவே அணி வீரர்கள் இடைபெற்றுள்ளனர்.
ஆசிய அணியின் கேப்டனாக இலங்கை அணி கேப்டன் ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இரு அணிகளுக்கான தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந் நிலையில் ஆசிய லெவலில் இருந்து சச்சின் டெண்டுல்கர் விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் எதற்காக விலகினார் என்று தெரியவில்லை.
மேலும் இலங்கை வீரர்கள் வாஸ், மலிங்கா ஆகியோரும் இந்தப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு பதிலாக இந்திய வீரர்கள் சவுரவ் கங்குலி, ஜாகீர் கான், இலங்கை வீரர் பெர்னாண்டோ, வங்கதேச வீரர் மொர்தாசா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதே போல 20-20 ஓவர் போட்டிக்கான ஆசிய அணயில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டள்ளது. முனாப் பட்டேலுக்கு பதிலாக ஸ்ரீசந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications