ராஜஸ்தானில் பயங்கர வன்முறைபோலீஸ் துப்பாக்கி சூடு - 9 பேர் பலி
ஜெய்பூர்:இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் தங்களைச் சேர்க்க்க கோரி குஜ்ஜார் சமுதாய மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸார் கூட்டத்தைக் கலைக்க நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியானார்கள். இதனால் ராஜஸ்தானில் பரபரப்பு நிலவுகிறது.
ராஜஸ்தானில் உள்ள குஜ்ஜார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று அவர்கள் ஜெய்ப்பூரில் போராட்டத்தில் குதித்தனர். 2000க்கும் மேற்பட்ட குஜ்ஜார் சமூகத்தினர் திரண்டு வந்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது. ஜெய்ப்பூர்-ஆக்ரா சாலையை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறித்தனர். இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் குதித்தனர். இதில் 9 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வன்முறையில், ஏராளமான போலீஸாரும் காயமடைந்தனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள நான்கு முக்கிய நெடுஞ்சாலைகளிலும் 20 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை குறித்து உயர் அதிகாரிகளுடன் மாநில காவல்துறை அமைச்சர் கட்டாரியா ஆலோசனை நடத்தியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications