தமிழக மீனவர்களைக் காக்கமத்திய, மாநில படைகள் கூட்டு ரோந்து
டெல்லி: தமிழக மீனவர்களை பாதுகாக்க தமிழக கடலோரப் பகுதிகளில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து கூட்டு ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியுள்ளார்.
டெல்லி சென்றுள்ள முதல்வர் கருணாநிதி, நேற்று இரவு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்தார். அப்போது கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சமீபத்தில் கடத்தப்பட்டதும், சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும் முக்கியமாக விவாதித்தார்.
இதையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நாளை உங்களை சந்தித்து இதுகுறித்து விவாதிப்பார் என தெரிவித்தார். அதன்படி இன்று காலை எம்.கே.நாராயணன், முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
முதல்வரை சந்தித்து விட்டு வந்த எம்.கே.நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க, மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து தமிழக கடலோரப் பகுதிகளில் கூட்டு ரோந்தில் ஈடுபடும்.
இதுகுறித்து விரிவாகப் பேச வரும் 31ம் தேதி சென்னை வரவுள்ளேன். அப்போது முதல்வர் கருணாநிதியுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படும். அப்போது தமிழக மீனவர்களைப் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விவாதிக்கப்படும்.
விடுதலைப் புலிகள் வான்வழியாகவும், கடல்வழியாகவும் தாக்குதல் நடத்தும் அளவிற்கு உயர்ந்திருப்பதை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.
விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. தமிழகம் வரும்போது தமிழக முதல்வரிடம் இதுகுறித்தும் பேசப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications