அதிமுக வேட்பாளர் டாக்டர் மைத்ரேயனுக்குசொந்த வீடு இல்லை.., குவாலிஸ் உண்டு
சென்னை:அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் மைத்ரேயன் தனக்கு சொந்த வீடு, நிலம் இல்லை, ஆனால் குவாலிஸ் கார் உள்ளிட்ட பல சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் மைத்ரேயன், ஆ.இளவரசன் ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். தங்களின் சொத்துக்கள் குறித்த விவரத்தையும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
டாக்டர் மைத்ரேயனின் சொத்துக்கள் குறித்த விவரம்
![]() |
என் மீது எந்த வழக்கும் காவல் நிலையத்தில் இல்லை. எந்தக் குற்ற வழக்கிலும் சம்பந்தப்படவில்லை. ரூ. 90 ஆயிரம் ரொக்கப் பணம் வைத்துள்ளேன்.
பெசன்ட் நகரில் உள்ள ஆந்திரா வங்கியில் ரூ. 11,773 பணம் உள்ளது. டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 1,932 இருக்கிறது.
இந்திரபிரஸ்தா மெடிக்கல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ரூ. 6,020 மதிப்புள்ள 200 பங்குகள் உள்ளன. ஸ்ரீசாயிராம் ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் தமிழ்ப் படம் ஒன்றின் உரிமைக்காக ரூ. 5 லட்சம் பணம் அட்வான்ஸ் கொடுத்துள்ளேன்.
ரூ. 6 லட்சத்து 37 ஆயிரத்து 260 மதிப்புள்ள டயோட்டா குவாலிஸ் ஏசி கார் வைத்துள்ளேன். ரூ. 1 லட்சம் மதிப்புள்ள எல்.ஐ.சி பாலிசி உள்ளது. 60 கிராம் தங்க நகைகள் (மதிப்பு ரூ. 48,000) உள்ளன.
கடந்த நிதியாண்டில் ரூ. 51,000 அளவுக்கு வருமான வரி கட்டியுள்ளேன். எம்.பி.பி.எஸ்., எம்.டி பட்டம் வாங்கியுள்ளேன். சொந்தமாக வீடு, நிலம் கிடையாது என்று கூறியுள்ளார் டாக்டர் மைத்ரேயன்.
ஆ. இளவரசன் தாக்கல் செய்துள்ள சொத்துக் குறிப்பில், கையில் ரொக்கமாக ரூ. 30,000 பணம் உள்ளது. மனைவி புவனேஸ்வரி பெயரில் ரூ. 20 ஆயிரம் உள்ளது. வங்கி, நிதி நிறுவனங்களில் முதலீடுகள் எதுவும் இல்லை.
மனைவி பெயரில் புத்தூர் கிராமத்தில், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள வீடு உள்ளது. ரூ. 5000 மதிப்புள்ள இரு சக்கர வாகனம் என்னிடம் உள்ளது. மனைவி பெயரில் காண்டசா கார் உள்ளது. நகை, விவசாய நிலம் கிடையாது.
திருச்சி அண்ணாமலை நகரில் ரூ. 26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வீடு உள்ளது. பெட்டவாய்த்தலையில் உள்ள வங்கியில் ரூ. 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் நிலுவை உள்ளது. எனது பெயரில் தனியாக ரூ. 57 ஆயிரம் கடன் உள்ளது என்று கூறியுள்ளார் இளவரசன்.
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்













Click it and Unblock the Notifications