அமெரிக்காவில் விமான பணிப் பெண்களிடம் ரகளை-சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர் கைது
நியூயார்க்:விமானத்தில் விமான பணிப் பெண்களிடம் ரகளை செய்த இந்திய சாப்ட்வேர் என்ஜினீயரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்தவர் திருமூர்த்தி பூமையா. சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுகாக முன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டலில் இருந்து அமெரிக்காவின் பிலடெல்பியாவுக்கு சென்றார்.
அப்போது இவர் விமானப் பணிப் பெண்களிடம் ரகளை செய்துள்ளார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து விமானம் பிலடெல்பியாவில் தரையிறங்கயதும் போலீஸார் அவரை கைது செய்தனர். அவர் மீது விமானப் பணிப் பெண்களிடம் ரகளை செய்ததாகவும், ஊழியர்களை தாக்கியதாகவும், வேலை செய்ய விடாமல் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் பிலடெல்பியா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 69 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications