திண்டுக்கல் கோவில் உண்டியல் தகராறு:திமுக மீது ஜெ. புகார்- அதிமுக உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திண்டுக்கல் விளாம்பட்டி முத்தாலம்மன் கோவில் உண்டியலை திமுகவினரே சூறையாடியதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீஸாரையும் திமுக அரசையும் எதிர்த்து, திண்டுக்கல்லில் நாளை அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடக்கும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவில் உண்டியலை 10 பேர் கொண்ட திமுக கும்பல் சூறையாடி அதிலிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு ஓடியது. இவர்களை தடுக்க முனைந்ச பொதுமக்கள் மீது எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

போலீஸார் லத்தியடியோ அல்லது கண்ணீர் புகை குண்டுகளையோ வீசாமல், நேரடியாக துப்பாக்கி சூடு நடத்தும் அளவிற்கு அந்த கிராம மக்கள் செய்த குற்றம் என்ன என்று தெரிய வேண்டும்.

மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதோடு மட்டுமில்லாமல், அவர்களுடைய வீடுகளுக்குள் புகுந்து தொலைக்காட்சி போன்ற பொருட்களையும் போலீசார் அடித்து நொறுக்கியுள்ளனர்.

10 பேர் கொண்ட திமுக கும்பல், உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தையும், நகைகளையும் கோவில் நிர்வாகி முன்பாக எடுத்து சென்றுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீசாரின் இத் தாக்குதலை கண்டித்தும், அரசைக் கண்டித்தும் திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஸ்வநாதன், நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழி ஆகியோர் தலைமையில் நாளை அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+