மதுரை-மேலும் 3 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
மதுரை:மதுரை மேற்கு தொகுதி தேர்தலை முன்னிட்டு மேலும் 3 போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தல் அடுத்த மாதம் 26ம் தேதி நடக்கவிருப்பதையடுத்து அதற்கான மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
இந்த தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறை அதிகாரிக்களுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
தேர்தல் அதிகாரியாக மதுரை கோட்டாட்சியர் நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் மேற்கு தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்த 15 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கடந்த வாரம் இடமாறுதல் செய்யப்பட்டனர்.
இந் நிலையில் திமுக ஆதரவு அதிகாரிகள் என அதிமுகவால் புகார் கூறப்பட்ட மேலும் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திலகர் திடல் உதவி கமிஷ்னர் ராஜேந்திரன், அண்ணாநகர் உதவி கமிஷ்னர் குமாரவேல், மதுரை நகர உதவி கமிஷ்னர் சுந்தரேசன் ஆகியோர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மதுரை மேற்கு தொகுதி தேர்தல் பகுதியில், தேர்தல் முடியும் வரை செல்லவோ, தேர்தல் பணி செய்யவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுபதிவு தினத்தன்று வாக்குச் சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு, 3,000 போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் பணியில் ஈடுப்படுத்தப்படுகின்றனர்.
தேர்தல் பணியில் நேர்மையான அதிகாரிகளை பயன்படுத்தவும், வாக்குசாவடிகளில் தலைமை அலுவலராக மத்திய அரசு ஊழியரை நியமிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications