ஜூன் 4ம் முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்:ஜூன் 14ல் மார்க் சீட்
சென்னை:பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டனது. இதையடுத்து மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் ஜூன் 14ம் தேதி வழங்கப்படும் என தேர்வுகள் துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
மாணவர்களின் மதிப்பெண் பட்டியில் அனைத்து பள்ளிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர இணையத் தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியில்கள் வரும் ஜூன் 14ம் தேதி வழங்கப்படும். மாணவர்கள் அந்ததப் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
மறு கூட்டல்:
மாணவர்கள் தங்களது பாடங்களின் மறு கூட்டலுக்கு வரும் ஜூன் மாதம் 4ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
மறு கூட்டலலுக்கான விண்ணப்பங்கள் அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, கடலூர் மற்றும் வேலூர் ஆகிய அரசுத் தேர்வுகள் மணடல அலுவலகங்களில் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை கிடைக்கும்.
இதற்கான கட்டணங்கள், ஒரு தாள் கொண்ட பாடத்திற்கு ஒவ்வொன்றிற்கும் ரூ.205 மற்றும் இருதாள் கொண்ட பாடத்திற்கு ஒவ்வொன்றிற்கும் ரூ.305 ஆகும்.
மார்ச் 2007 தேர்வு எழுதியவர்கள் 3 அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வியுற்றவர்கள் ஜூன், ஜூலையில் நடைபெறவுள்ள சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை வழங்கப்படும்.
பள்ளி மாணவர்கள் பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணங்களை ஒப்படைக்க வேண்டும்.
மார்ச் மாதத்திற்கு முன் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத்தேர்வு எழுத விரும்பினால், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் பெற்று, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்ப வேண்டும்.
எஸ்எஸ்எல்சி சிறப்பு துணைத் தேர்வு ஜூலை 4ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலும், ஓஎஸ்எல்சி தேர்வு ஜூலை 3ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலும், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்திய தேர்வுகள் ஜூலை 2ம் தேதி முதல் 12ம் தேதி வரையும் நடைபெறும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications