ஊரை அடித்து உலையில் போடுபவர் கருணாநிதி: இராமகோபாலன் கடும் தாக்கு
சென்னை:ஊரை அடித்து உலையில் போடுவது என்ற பழமொழி முதல்வர் கருணாநிதிக்கு மிக பொருத்தமாக இருக்கும் என இந்து முன்னணி அமைப்பாளர் இராம கோபாலன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தனக்கு உமறுப் புலவர் விருது வழங்கப்பட்ட மகிழ்ச்சியில் தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவசர சட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுபோன்று மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் காரணமாகத்தான் பாகிஸ்தான் பிரித்து கொடுக்க வேண்டும் என கலவரம் நடத்தி பாகிஸ்தானை பெற்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இதை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டால் கூட அது தேசவிரோத செயலாகும். இந்த சலுகை மதமாற்றம் அதிகரிக்க காரணமாக அமைந்துவிடும். இது மதமாற்றத்தை ஊக்குவிக்கும். அந்த மதத்திற்கு போனால் அந்த மதச் சலுகைகளுடன், அரசின் சலுகைகளும் கிடைக்கிறது என்பதால் மதமாற்றம் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும்.
ஊரை அடித்து உலையில் போடுவது என்ற பழமொழி தமிழக முதல்வருக்கு பொருத்தமானது. இது சிறுபான்மையினரின் வாக்குகளை வளைத்துப் போட செய்யப்படும் தந்திரம்.
இந்து மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீட்டில், மற்ற மதங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என்று புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் கருத்து பாராட்டப்பட வேண்டியது.
இந்த இட ஒதுக்கீடு சட்டரீதியாக செல்லாது என நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் முதல்வர் கருணாநிதி இப்படி தந்திரமாக கூறி முஸ்லீம்களையும், இந்துக்களையும் ஏமாற்றுகிறார்.
அனைத்துக் கட்சியிலும் உள்ள முஸ்லீம்களும், முஸ்லீம் இட ஒதுக்கீட்டிற்காக பாடுபடும் நிலையில் அனைத்துக் கட்சியிலும் உள்ள இந்துக்களும் உரிமையை காப்பாற்ற விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் போராட வேண்டும். அதற்கு இந்து முன்னணி துணை நிற்கும் என உறுதியளிக்கிறோம் என கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications