மாங்காய் பறித்த குற்றத்திற்காக சிறுவனை சுட்டவர் கைது
சென்னை:சென்னை திருவான்மியூரில், ஓய்வு பெற்ற விமானி ஒருவர், தன் வீட்டு அருகே உள்ள மாமரத்திலிருந்து மாங்காய் பறித்து விளையாடிய சிறுவர்களை ஏர் கன் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிறுவன் படுகாயமடைந்தான். இதனால் அந்த விமானியை போலீஸார் கைது செய்தனர்.
![]() |
திருவான்மியூர் குடிசை மாற்று வாரிய வீடு ஒன்றில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் ஏழுமலை. இவரது மகன் மணிகண்டன். 6ம் வகுப்பு படித்து வருகிறான் மணிகண்டன்.
அதே பகுதியில் உள்ள ராஜகோபால் தெருவில் உள்ள ஒரு மாமரத்தில் மணிகண்டனும், இன்னும் சில சிறுவர்களும் மாங்காய் பறித்து விளையாடியுள்ளனர். அப்போது திடீரென யாரோ ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
![]() |
இதில் மணிகண்டனின் மார்பில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தான். ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக மணிகண்டனை கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை மூலம் குண்டு அகற்றப்பட்டது. இப்போது சிறுவன் குணமடைந்து வருகிறான்.
இந்த நிலையில் சிறுவனை சுட்டது மாமரம் உள்ள வீட்டின் உரிமையாளரான விமானி பிராங்க் இலியாஸ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், மாமரத்தில் மாங்காய் பறித்து விளையாடக் கூடாது என்று சிறுவர்களை எச்சரித்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் தங்களது டிரவுசர்களை கழற்றி விட்டு தன் முன் ஆடி கேலி செய்ததாகவும் அந்த ஆத்திரத்தில், தான் பலூன் சுட பயன்படுத்தும் ஏர் கன் துப்பாக்கியால் சுட்டதாகவும் பிராங்க் கூறினார்.
மணிகண்டன் இறந்து விட்டதாக பயந்து போன பிராங்க் வீட்டை விட்டு தலைமறைவாகி விட்டார். பின்னர் வீடு திரும்பியபோது போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார்.














Click it and Unblock the Notifications