மதுரையில் வெற்றி வாய்ப்பு பிரகாசம்-காங்கிரஸ்
சென்னை:திமுக, காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை மதுரை வன்முறை சம்பவம் பாதிக்காது. எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
நேற்று சத்திய மூர்த்தி பவனில் மேற்கு தொகுதி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கலந்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளருக்கான நேர்காணல் நடந்துக் கொண்டிருக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட 55 பேர் வரை விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதனுடைய இறுதி பட்டியல் திங்கட்கிழமை கட்சி மேலிடத்திற்கு அனுப்பப்படும். அவர்கள் முடிவுப்படி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
மதுரை வன்முறை சம்பவத்தால் இடைத் தேர்தலில் எந்த பாதிப்பும் இருக்காது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
காங்கிரஸ் கட்சி மற்றும் தோழமை கட்சிகள் தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ளனர் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications