வாட்ச்மேனை அடித்ததாக கொடநாடு பஞ்சாயத்துதலைவர் மீது போலீஸ் வழக்கு
கோத்தகிரி: சர்ச்சைக்குரிய கொடநாடு எஸ்டேட் காவலாளியை அடித்ததாக கொடநாடு பஞ்சாயத்துத் தலைவர் பொன்தோஸ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாட்டில் 800 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட் ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த எஸ்டேட்டுக்குச் சென்ற ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் கிட்டத்தட்ட 1 மாதம் ஓய்வெடுத்தார். இந்த எஸ்டேட்டில் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கொடநாடு பஞ்சாயத்துத் தலைவர் பொன்தோஸ் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரின் பேரில் ஜெயலலிதா எஸ்டேட்டிற்குள் இருந்தபோது அதிகாரிகள் சோதனை நடத்த எஸ்டேட்டுக்கு வந்தனர். ஆனால் அவர்களை அதிமுகவினர் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.
இந்த நிலையில் ஜெயலலிதா எஸ்டேட்டை விட்டுச் சென்ற சில நாட்களில் போலீஸாருடன் அதிரடியாக அதிகாரிகள் உள்ளே நுழைந்து சோதனை போட்டனர்.
சோதனைக்குப் பின்னர் எஸ்டேட் வளாகத்திற்குள் 14,000 சதுர அடியில் அனுமதியின்றி பங்களா கட்டப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அரசு அதிகாரிகள் பங்களாவின் உட்புறத்திலும் சோதனை மேற்கொள்ள முடிவு செய்தபோது அதற்கு தடை வாங்க எஸ்டேட் நிர்வாகிகள் தீவிரம் காட்டினர். இதனால் புகார் கொடுத்த பொன்தோஸுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கொடநாடு எஸ்டேட்டிற்குள் உள்ள அண்ணா நகர் என்ற இடத்திற்குச் செல்ல பஞ்சாயத்து தலைவர் பொன்தோஸ், காமராஜ், தங்கவேல் ஆகியோர் சென்றபோது, எஸ்டேட் காவலாளி பாஸ் இருந்தால்தான் கேட்டைத் திறக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்தார் பொன்தோஸ். நான் யார் தெரியுமா என்று ஆவேசமாக கேட்டபடி, காவலாளியின் சட்டையை பிடித்து கீழே தள்ளிவிட்டார்.
அப்போது அங்கு வந்த எஸ்டேட் அதிகாரி ராதாகிருஷ்ணனிடமும் பொன்தோஸ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் மற்றும் மேலாளர் ரவிச்சந்திரன், உதவி மேலாளர் பாபு ஆகியோர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில், பொன்தோஸ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications