சுனாமி மீனவர்கள் பள்ளி புறக்கணிப்பு போராட்டம்
சென்னை:நிரந்தர குடியிருப்புகள் வழங்கும் வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என சுனாமி தற்காலிக குடியிருப்புகளில் உள்ள மீனவர்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
சென்னை எண்ணூர்ர் தற்காலிக குடியிருப்பிலுள்ள 2,000க்கும் மேற்பட்ட மீனவர்களின் குழந்தைகள் சுமார் 678 பேர் ராயபுரம், காசிமேடு , தண்டையார்பேட்டை, புதுவண்ணாரபேட்டை போன்ற பகுதிகளிலுள்ள பள்ளிகளில் படித்து வருகி்ன்றனர்.
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்டதால் குழந்தைகள் ஏற்றி செல்வதற்காக கருணாலயா தொண்டு நிறுவனத்தின் 3 பேருந்துகள் சுனாமி குடியிருப்பு பகுதிக்கு வந்தன.
ஆனால் மீனவர்கள் தங்களுக்கு நிரந்தர குடியிருப்புகள் தரும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பேருந்துகளை திருப்பி அனுப்பி விட்டனர்.
இதே போன்று அங்கு வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களையும் திருப்பி அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications