மதசார்பின்மையை கட்டிக் காக்கும் கருணாநிதி- ராசா
புதுச்சேரி:மதசார்பின்மையை கட்டிக் காத்து வருபவர் முதல்வர் கருணாநிதி என மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறினார்.
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
மதவாதத்தை தீவிரமாக எதிர்ப்பவர் கருணாநிதி. நாட்டின் மதசார்பின்மையை கட்டிக் காக்கவும் அனைத்து சமூகத்தினரும் சமமாக மதிக்கப்படவும் பேராடி வருபவர். ஜனநாயகத்தையும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் பேணி பாதுகாக்க பேராடி வருகிறார்.
பாஜக கூட்டணியில் திமுக இடம் பெற்றிருந்தபோது, அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என ஒரு முறை கூட பாஜக கூறியது இல்லை. அதற்குக் காரணம் கருணாநிதி தான்.
வங்கிகளை தேசிய மயமாக்குமாறு இந்திரா காந்தியிடம் கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றிக் காட்டியவர். தமிழகத்தை எத்தனையோ முதல்வர்கள் ஆண்டிருக்கிறார்கள். ஆனால், கருணாநிதி முதல்வராக இருக்கும்போது மட்டும் தான் மக்கள் நல் வாழ்வு பெறும் நூதனமான திட்டங்கள் அறிமுகமாயின என்றார்.












Click it and Unblock the Notifications