மாநிலம் முழுவதும் அதிமுகவினர் திடீர் பேராட்டம்போக்குவரத்து பாதிப்பு-எம்எல்ஏக்கள் கைது
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா-சசிகலாவுக்கு சொந்தமானதாகக் கருதப்படும் கொட நாடு எஸ்டேட்டில் சோதனை நடந்ததை கண்டித்தும், கொட நாடு எஸ்டேட் விவகாரத்தில் ஜெயலலிதாவின் எம்எல்ஏ பதவியை பறிக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியதை கண்டித்தும், இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் திடீர் பேராட்டத்தில் குதித்து போக்குவரத்தை நிறுத்தினர்.
ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டிலும் சிறுதாவூர் பங்களாவிலும் சோதனை நடக்கலாம் என்று கருதப்படும் நிலையில் அதிமுகவினர் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சென்னையில் அண்ணா சிலை அருகே தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் கலைராஜன் எம்எல்ஏ தலைமையில் மறியல் நடந்தது. இதனால் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டது.
இந்தப் பேராட்டத்தில் பதர்சயீத், செந்தமிழன் ஆகிய எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.
குறளகம் அருகே வட சென்னை மாவட்டச் செயலாளர் சேகர் பாபு எம்எல்ஏ தனது ஆட்களுடன் வந்து பேராட்டத்தில் குதித்தார். இதில் மாஜி மந்திரியும் பாபுவின் எதிர்கோஷ்டியைச் சேர்ந்தவருமான ஜெயக்குமார், சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்தப் பகுதியிலும் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது.
எழும்பூர் ரயில் நிலையம் அருகே மாஜி மந்திரி வளர்மதி தலைமையில் அதிமுக மகளிர் அணியினர் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னையில் இந்தப் பகுதிகளில் இன்று காலை பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பேராட்டத்தை அனுமதி பெறாமல் நடத்தியதால் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆங்காங்கே பேராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கருணாநிதி உருவபொம்மை எரிப்பு:
இந் நிலையில் திருநெல்வேலியில் முதல்வர் கருணாநிதியின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரித்தனர்.
ஜெயலலிதா மது குடிப்பதாக கருணாநிதி கூறியதைக் அதிமுகவினர் மாஜி மந்திரி அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடி கருணாநிதியின் உருவப் பொம்மையை எரித்தனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications