மதுரை மேற்கு தொகுதி: நாளையுடன் மனு தாக்கல் ஓய்கிறது
மதுரை:மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.
இத் தொகுதியில் வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதுவரை 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தேமுதிக வேட்பாளர் சிவமுத்துகுமார், பாஜக வேட்பாளர் சசிராமன் ஆகியோர் இன்று மனு தாக்கல் செய்கின்றனர். அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு மனு தாக்கல் செய்துவிட்டார்.
திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. இது ெதாடர்பாக கட்சிக்குள் பெரும் பூசல் நடந்து கொண்டுள்ளது. மேலிட பார்வையாளர் வீரப்ப மொய்லி அனைத்து கோஷ்டினருடனும் பேசிவிட்டு இப்போது டெல்லியில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தேர்தலுக்கு 19 நாட்கள் உள்ளநிலையில் இந்த தொகுதியில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக 18ம் தேதி மத்திய அதிரடிப்படையினர் 6 கம்பெனிகள் மதுரைக்கு வருகின்றன.
216 வாக்குச் சாவடிகளில் 65 பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டு அங்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்படவுள்ளது. மற்ற வாக்கு சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.
தேர்தல் பணிக்காக தமிழக ஆயுதப்படை போலீஸார் 2,500 பேர், சிறப்பு காவல்படை போலீஸார் 3,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
முன்னெச்சரி நடவடிக்கையாக 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளே தள்ளப்பட்டுள்ளனர். மேலும் முன்னாள் குற்றவாளிகள், தலைமறைவாக இருப்பவர்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றர்.
தொகுதிக்குள் வைக்கப்பட்டுள்ள கட்சி பேனர்கள், கட்-அவுட்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் சுவர்கள் வேட்பாளர்கள் சுவர் விளம்பரம் செய்தால் அதை அழிக்கும் செலவை அவர்களே ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அரசு அதிகாரி அஜித் தியாஜி இன்று மதுரை வருகிறார். 9ம் தேதி வரை தேர்தல் நடக்கும் தொகுதிகளை பார்வையிடுகிறார். இவரைத் தவிர 2 பார்வையாளர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications