எதிர்க்கட்சித் தலைவர்களை கொச்சையாகபேசுவது சிறுபிள்ளைத்தனமானது - பாஜக
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி:எதிர்க்கட்சித் தலைவர்களை கொச்சையாக வர்ணித்துப் பேசுவதும், எழுதுவதும் சிறுபிள்ளைத்தனமான செயல் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது.
ஆனால் இது குறித்துக் கவலைப்படாமல், அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், எதிர்க்கட்சியினர் நடத்தும் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களைக காவல்துறையினரை ஏவி விட்ட அடக்க முயற்சிக்கிறது திமுக அரசு.
எதிர்க்கட்சித் தலைவர்களை கேவலமாக, கொச்சையாக வர்ணித்து பேசுவதும், எழுதுவதுமாக முதல்வர் நடந்து கொள்வது சிறுபிள்ளைத்தனமானது என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications