விண்ணில் செலுத்தப்பட்டது அட்லாண்டிஸ்
Subscribe to Oneindia Tamil
கேப் கனரவல்(புளோரிடா):அமெரிக்க விண்கலமான அட்லாண்டிஸ் இந்திய நேரப்படி இன்று அதிகாலை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
![]() |
சர்வதேச விண்வெளி நிலையத்தில் புதிய சூரிய சக்தி தகடுகளைப் பொருத்தவும், அங்கு உள்ள இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதற்காகவும் அட்லாண்டிஸ் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப நாசா அமைப்பு முடிவு செய்தது.
இந்த விண்கலத்தில் 7 விண்வெளி வீரர்களும் செல்ல முடிவாகியது. இதற்கான கவுண்ட்டவுண் தொடங்கியது. இந்த நிலையில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 5.08 மணிக்கு மத்திய புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து அட்லாண்டிஸ் விண்ணில் செலுத்தப்பட்டது.
நாசா அமைப்பு இந்த ஆண்டு விண்ணில் செலுத்தும் முதல் விண்கலம் அட்லாண்டிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. பூமியிலிருந்து கிளம்பிய எட்டரை நிமிடங்களில் விண்வெளியை அடைந்தது அட்லாண்டிஸ்.
விண்ணில் செலுத்தப்பட்ட அட்லாண்டிஸ், இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும்.













Click it and Unblock the Notifications