கைதான அதிமுகவினர் விடுதலை
சென்னை:தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், கொடும்பாவி எரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுக் கைதான அதிமுகவினர் 11 ஆயிரத்து 350 பேரும் நேற்று மாலை சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தரக்குறைவாக முதல்வர் கருணாநிதி பேசியும், எழுதியும் வருவதாக கூறி அதைக் கண்டித்து 7ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் குதித்தனர்.
முதல்வரின் கொடும்பாவியும், முரசொலி நாளிதழும் தீவைத்து எரிக்கப்பட்டன. மேலும் சாலை மறியல் போராட்டத்திலும் அதிமுகவினர் ஈடுபட்டனர். பல பகுதிகளில் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் மோதலும் நடந்தது.
இதையடுத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வானூர் இன்ஸ்பெக்டர் கணபதியை உயிரோடு எரிக்க முயன்றதாக கைதான 28 பேரைத் தவிர மற்றவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து காவல்துறை சார்பில் அதிமுகவினர் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டதாக சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே ஜாமீனில் வெளியானவர்கள் போக மீதமுள்ள 11,350 பேரும் நேற்று மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications