மதுரை இடைத் தேர்தல்: 29 மனுக்கள் ஏற்பு
Subscribe to Oneindia Tamil
மதுரைமதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 10 பேரின் மனுக்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டன.
மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தவர்களின் மனுக்கள் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
தேர்தல் அதிகாரியும், மதுரை மாவட்ட கோட்டாட்சியருமான நாராயணமூர்த்தியின் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனை நடந்தது.
இதில் அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் உள்ளிட்ட 10 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதம் இருந்த 29 வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications