குமரி மாவட்டத்திலும் பரவியது சிக்குன்குனியா
நாகர்கோவில்:கேரளாவை ஆட்டிப் படைத்து வரும் சிக்குன்குனியா காய்ச்சல் கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டப் பகுதிகளிலும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
கேரளாவில் கடந்த சில வாரங்களாக சிக்குன்குனியா காய்ச்சல் படு வேகமாக பரவி வருகிறது. சிக்குன்குனியாவுக்கு இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர்.
சிக்குன்குனியாவைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது. இதனால் ராணுவமும், கடற்படையும் அங்கு களத்தில் குதித்துள்ளன. சிக்குன்குனியாவைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பரவி வரும் சிக்குன்குனியா தமிழகத்திற்குள் ஊடுறுவி விடாமல் தடுக்க கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை, தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் நுழைபவர்களுக்கு சோதனை நடத்தப்படுகிறது. தடுப்பு மருந்துகளும் அளிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கேரளாவையொட்டியுள்ள குமரி மாவட்ட கிராமங்களில் சிக்குன்குனியா பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுள்ளனர்.
இதனால் குமரி மாவட்ட மக்களிடையே சிக்குன்குனியா பீதி பரவியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications