சிவராஜ் பாட்டீலுக்கு ஆதரவுஇடது சாரிகள் புதிய நிபந்தனை
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் சிவராஜ் பாட்டீலுக்கு ஆதரவு தர வேண்டுமானால், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சோம்நாத் சாட்டர்ஜியை நிறுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சம்மதிக்க வேண்டும் என இடது சாரிக் கட்சிகள் புதிய நிபந்தனை விதித்துள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முடிவை இடதுசாரிகள் ஏற்க மறுத்துள்ளனர். மாறாக, சிவராஜ் பாட்டீலுக்கு ஆதரவு தர வேண்டுமானால், லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அவை நிபந்தனை விதித்துள்ளன.
இந்த நிபந்தனையை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால் இதுதான் தங்களது நிபந்தனை என்பதை அவர்கள் மறைமுகமாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சிவராஜ் பாட்டீலுக்கு ஆதரவு தர முடியாது, தங்களது கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதி என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதேசமயம், முன்னாள் பாஜக முதல்வரும், தற்போதைய குடியரசுத் துணைத் தலைவருமான பைரான் சிங் ஷெகாவத்தை சுயேச்சையான வேட்பாளராக நிறுத்தவும் பாஜக கூட்டணி முடிவு செய்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications