பிரேம்குமார் டிஸ்மிஸ்: தடை விதிக்க கோர்ட் மறுப்பு
சென்னை:தன்னை டிஸ்மிஸ் செய்த அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி பிரேம்குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
ஜெயேந்திரர் வழக்கை விசாரித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரேம்குமார். இவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தபோது, நல்லகாமன் என்கிற முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது மகன் ஆகியோரை கைவிலங்கிட்டு, தெருவில் இழுததுச் சென்று சித்திரவதை செய்து பொய் வழக்குப் போட்டதாக பிரேம்குமார் உள்ளிட்ட 3 காவலர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரி்த்த மதுரை நீதிமன்றம் பிரேம்குமார் உள்ளிட்டோருக்கு தலா 1 மாத சிறைத் தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து பிரேம்குமார் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தன்னை டிஸ்மிஸ் செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பிரேம்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த மனுவை நீதிபதி மணிக்குமார் இன்று விசாரித்தார். அப்போது இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதி அதுதொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்தார். அதேசமயம், டிஸ்மிஸ் உத்தரவை ரத்து செய்யக் கோரும் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
அந்த மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உள்துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications