நாகர்கோவில்-ஹெளரா ரயில்தடம் புரண்டு 3 பேர் பலி
விசாகப்பட்டனம்:நாகர்கோவிலில் இருந்து ஹெளரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்,ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனம் அருகே தடம் புரண்டதில் 3 பயணிகள் இறந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
நாகர்கோவிலில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹெளராவுக்கு குருதேவ் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. ரயில்,விசாகப்பட்டனம் அருகே துவ்வடா என்ற இடத்தில் நேற்று நள்ளிரவில் போய்க் கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது.
![]() |
மொத்தம் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் வீரேந்திரா (61), பிரசாத் (51),சையன் (35) ஆகிய 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த 3 பேரும் ஒரிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர்கள். காயமடைந்தவர்கள் விசாகப்பட்டனத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே மருத்துவமனையிலும் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய ரயிலில் 600க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து காரணமாக இப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை-ஹெளரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ், அனகாபள்ளியுடன் நிறுத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத்-ஹெளரா பலக்நாமா எக்ஸ்பிரஸ்,ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எளமங்கலி நிலையத்துடன் நிறுத்தப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications