காலில் வீக்கம்-மருத்துவமனையில் கருணாநிதிக்குசிகிச்சை: மாலை டெல்லி பயணம்
சென்னை:முதல்வர் கருணாநிதிக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் அவரது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது.
பிற்பகலில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து இன்று மாலை டெல்லி செல்கிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இடது சாரித் தலைவர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துவதற்காக நேற்றிரவு டெல்லி செல்ல இருந்தார் கருணாநிதி.
ஆனால், அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. காலில் வீக்கமும் ஏற்பட்டது.
இதையடுத்து அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு வழக்கமான உடல் நல பரிசோதனையும் நடந்தது.
இதைத் ெதாடர்ந்து 12 மணிக்கு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து இன்று மாலை அவர் டெல்லி ெசல்வார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்த.












Click it and Unblock the Notifications