இந்திய அணியிலிருந்து ஷேவாக் நீக்கம் -72 வயது சந்து போர்டே மேனேஜர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணியிலிருந்து வீரேந்திர ஷேவாக், ஹர்பஜன் சிங், முனாப் படேல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அணியின் மேலாளர் மற்றும் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் சந்து போர்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நேற்று முன்தினம் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரகாம் போர்டு நியமிக்கப்பட்டார். ஆனால் அந்தப் பொறுப்பை ஏற்க முடியாது என்று அவர் மறுத்து விட்டார்.

அதேபோல நேர்காணலுக்கு வந்து நிராகரிக்கப்பட்ட ஜான் எம்புரேவும் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் எண்ணம் இல்லை என்று மறுத்து விட்டார்.

இந்த விளம்பர ஸ்பெஷல் அணியை வைத்துக் கொண்டு முன்னணி டீம்களை வெல்வது சாத்தியமில்லை என்பதால் இருவரும் ஒதுங்கிக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.

இரு முன்னணி கோச்களும் மூக்கறுத்துவிட்டதால் இந்திய கிரிக்கெட் வாரியம் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்த அதிர்ச்சி விலகாத நிலையில், டெல்லியில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் நடந்தது.

இதில் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளுடன்

இந்தியா கலந்து கொள்ளும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான அணிகள் தேர்வு செயய்ப்பட்டன.

இந்த அணியில், வீரேந்திர ஷேவாக், ஹர்பஜன் சிங், முனாப் படேல் ஆகியோருக்கு இடம் வழங்கப்படவில்லை. அவர்கள் மூவரும் நீக்கப்பட்டதாக தேர்வாளர் குழுத் தலைவர் வெங்சர்க்கார் தெரிவித்தார்.

ஒரு நாள் அணிக்கான துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் டோணி நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணிக்கான துணை கேப்டனா சச்சின் டெண்டுல்கர் இருப்பார்.

அணி விவரம்:

ஒரு நாள் அணி:

ராகுல் டிராவிட் (கேப்டன்), கெளதம் காம்பீர், ராபின் உத்தப்பா, கங்குலி, டெண்டுல்கர், யுவராஜ் சிங், மகேந்திர சிங் டோணி (து.கேப்டன்), திணேஷ் கார்த்திக், ஸ்ரீசந்த், ஜாகிர் கான், ஆர்.பி.சிங், பையூஸ் சாவ்லா, ரமேஷ் பவார், அஜீத் அகர்கர், ரோகித் சர்மா.

டெஸ்ட் அணி:

ராகுல் டிராவிட் (கேப்டன்), கெளதம் காம்பீர், வாசிம் ஜாபர், கங்குலி, டெண்டுல்கர் (து.கேப்டன்), வி.வி.எஸ்.லட்சுமன், யுவராஜ் சிங், மகேந்திர சிங் டோணி, திணேஷ் கார்த்திக், ஸ்ரீசந்த், ஜாகிர் கான், கும்ப்ளே, ஆர்.பி.சிங், ரமேஷ் பவார், ரனதேவ் போஸ், இஷாந்த் சர்மா.

இந்த பயணத்திற்கான இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் மேலாளராக முன்னாள் கேப்டன் சந்து போர்டே நியமிக்கப்பட்டுள்ளார். போர்டேவுக்கு 72 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுத்தம்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+