கருணாநிதி டெல்லி பயணம் திடீர் ரத்து
சென்னை:முதல்வர் கருணாநிதியின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் மீண்டும் எப்போது டெல்லி செல்வார் என்பது அறிவிக்கப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், இடது சாரித் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த முதல்வர் கருணாநிதி நேற்று மாலை டெல்லி செல்வதாக இருந்தது.
மாலை 5.30 மணி விமானத்தில் அவர் டெல்லிக்குச் செல்ல இருந்தார்.
இந் நிலையில் கடைசி நேரத்தில் அவரது டெல்லி பயணம் ரத்து செய்யப்ட்டது. இதற்கான காரணம் கூறப்படவில்லை.
சிவராஜ் பாட்டீலை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த சோனியா விரும்புகிறார். ஆனால், இதற்கு இடதுசாரிகளின் ஆதரவு இன்னும் கிடைக்கவில்லை. இடதுசாரிகளுடன் சோனியா தீவிர பேச்சு நடத்தி வருகிறார்.
இதனால் கருணாநிதியின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மீண்டும் அவர் எப்போது டெல்லி செல்வார் என்பதும் அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications