வருகிறது ரியல் எஸ்டேட் டிவி
பெங்களூர்:ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவே புதிய 24 மணி நேர டிவி சானல் அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து சேனலின் புரமோட்டரும், அலயன்ஸ் குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான மனோஜ் நம்பூரு பெங்களூரில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அலயன்ஸ் நிறுவனம் இந்த சானலை உருவாக்கினாலும் கூட, ரியல் எஸ்டேட் தொழிலுக்கெனவே அர்ப்பணிக்கப்பட்ட சானலாகும்.
ஆங்கிலத்தில் அமைந்துள்ள இந்த சானல், பிரபல பத்திரிக்கையாளரான சசிகுமாரின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் செயல்படும். டி.கே.விபாகர் இதன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பார்.
ரூ. 100 கோடி முதலீட்டில் இந்த சானல் தொடங்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெறும்.
ரியல் எஸ்டேட் தொடர்பான அனைத்து புள்ளி விவரங்கள், அப்டேட் செய்திகள், அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பான செய்திகள் இந்த சானலில் இடம் பெறும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் வளைகுடா நாடுகள், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ரியல் எஸ்டேட் குறித்த செய்திகளும் அதிக அளவில் இடம் பெறும்.
மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய இடங்களில் செய்தி மையங்களும், அதி நவீன ஸ்டுடியோக்களும் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார் நம்பூரு.












Click it and Unblock the Notifications