சென்னை ஷேர் புரோக்கர்கள் வீடுகளில்அதிரடி வருமான வரி ரெய்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையைச் சேர்ந்த சில பங்குச் சந்தை புரோக்கர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பெருமளவு பணம் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் சிக்கின.
அகமதாபாத்திலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். உள்ளூர் வருமான வரித்துறையினருக்குக் கூட இந்தத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சோதனையின்போது கணக்கில் வராத பெருமளவு பணம், பல்வேறு முதலீட்டு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications