பெண் போலீசாரை தாக்கிய அரவாணிகள்!!
சேலம்:பெண் போலீஸார் இருவரைத் தாக்கியதுடன், காவல் நிலையத்தில் உடைகளை களைந்து நிர்வாண கோலத்தில் ரகளை செய்த நான்கு அரவாணிகளை போலீஸார் கைது செய்தனர். அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து அரவணிகள் ஜமாத் உத்தரவிட்டுள்ளது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே 2 நாட்களுக்கு முன்பு இரவு, நான்கு அரவாணிகள் சேர்ந்து ஒரு இளைஞரை சுற்றி வளைத்து தாக்கினர்.
![]() |
அப்போது போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் சசிகலா (26), தீபா (25) ஆகியோர் இதைப் பார்த்து விட்டு ஓடி வந்தனர்.
அரவாணிகளை கண்டித்து சத்தம் போட்டனர். இதையடுத்து நான்கு அரவாணிகளும் பெண் போலீஸாரைத் தாக்கினர். பயந்து போன இரு போலீஸாரும் அங்கிருந்து ஓடினர். ஆனால் நான்கு அரவாணிகளும் விடாமல் துரத்தி துரத்தி அடித்தனர்.
போலீஸாருக்குத் தகவல் கிடைத்து அவர்கள் விரைந்து வந்து நான்கு பேரையும் அமுக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் ராதா, கமலி, ரம்யா, நித்யா என்பது தெரிய வந்தது.
வாலிபரைப் போட்டு அடித்தது ஏன் என்று அவர்களிடம் போலீஸார் கேட்டபோது, அந்த நபர் தங்களுடன் சந்தோஷமாக இருந்ததாகவும், ஆனால் போகும்போது காசு கொடுக்காமல் ஏமாற்றப் பார்த்ததாகவும், இதனால்தான் அடித்ததாகவும் நான்கு அரவாணிகளும் கூறினர்.
தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஒரு கட்டத்தில் கடுப்பாகிப் போன நான்கு பேரும் எழுந்து தங்களது உடைகளை களைந்து விட்டு ஆபாசமாக பேசியபடி ரகளை செய்தனர்.
இதைத் தொடர்ந்து நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து மகளிர் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, பெண் போலீஸாரைத் தாக்கியது மட்டுமல்லாமல், காவல் நிலையத்தில் ஆபாசமாக ரகளையிலும் ஈடுபட்டதற்காக நான்கு அரவாணிகளையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, சேலம் அரவாணிகள் ஜமாத் அமைப்பு தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து ஜமாத் தலைவர் சுமதி கூறுகையில், சேலத்தில் மட்டும் 3,700 அரவாணிகள் உள்ளனர். யாருமே இப்படி நடந்து கொண்டதில்லை. இப்படிப்பட்ட செயல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது. நான்கு பேரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
ஜமாத் விதிப்படி, நான்கு அரவாணிகளும் சேலத்தை விட்டு 3 மாதங்களுக்கு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட நாடு கடத்தல் போன்ற தண்டனை இது.
3 மாதங்களுக்கு அவர்கள் சொந்த ஊருக்குள் நுழையக் கூடாது. அவர்களுக்கு எந்த அரவாணியும் உதவக் கூடாது, ஒத்துழைப்பு தரக் கூடாது.
தண்டனை முடிந்து சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த பின்னர் நான்கு பேரும் சம்பந்தப்பட்ட பெண் போலீஸாரிடம் சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயத்தை சுட வைத்து சூடு போட்டு விடுவோம். அப்புறம், உலகில் உள்ள எந்த அரவாணியிடமும் அவர்கள் சேர முடியாது.
பாதிக்கப்பட்ட இரு பெண் போலீஸாரின் மன நிலையை நாங்கள் உணர்கிறோம், அதற்காக வருத்தப்படுகிறோம். இதுபோன்ற செயலை அனுமதிக்கவே மாட்டோம் என்றார் சுமதி.













Click it and Unblock the Notifications