கல்லூரிகளில் டிக்கெட் முன் பதிவு மையம்-ரயில்வே திட்டம்
சென்னை: ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கல்லூரிகளில் முன்பதிவு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் கூட்டம் நெரிசல் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் முன்பதிவு மையங்கள் இருந்தாலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நெரிசலை கட்டுபடுத்த முடியவில்லை.
இதற்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தபால் அலுவலகங்களில் ரயில் முன்பதிவு செய்யப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் ரயில் முன்பதிவு மையங்கள் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
முன்பதிவு மையம் அமைக்க கல்லூரி முன்வந்தால் அந்த கல்லூரிகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையத்திற்கான ஒப்பந்தம் செய்துக் கொள்ளப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications